எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை,செப்.22 - நெல்லையில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் போலீஸ் தடையை மீறி ரயில் நிலையத்தில் முயன்றதால் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது நடத்திய தாக்குதலில் 10 பேர் காயம் அடைந்தனர். கல்வீச்சு சம்பவத்தில் 10க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் சேதமடைந்தன.
மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி அமெரிக்காவில் வெளியான குறும்படத்தை மத்திய அரசு தடைசெய்ய வலியுறுத்தி நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்தனர். இதனையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர துணை கமிஷனர் மணிவண்ணன் (சட்டம் - ஒழுங்கு) தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த கழகத்தின் மாநில தலைவர் பாளை ரடிபீக் தலைமையில் பெண்கள் உள்பட ஏராளமானோர் நேற்று மாலை திரண்டனர். அப்போது அவர்கள் போலீசாரின் தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்று ரயில்நிலைய பொருட்களை சேதம் உண்டு பண்ண முயன்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது திடீரென்று போலீசாரிடம் தகராறு செய்து போலீசார்களை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் நிலைமையை கட்டுப்படுத்த அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் நாலாபுறமும் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இந்த போராட்டத்தில் ்டுபட்ட 18 பெண்கள் உள்பட 252 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் போராட்டக்காரர்கள் நெல்லை சந்திப்பு பேருந்துகாப்பு பணியில் ்டுபட்டிருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தி அங்கு நின்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போலீசார் ஜார்ஜ், பிலிப், பாலா, அருண், அகம்மதுஅலி,பேச்சிமுத்து உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
10க்கும் மேற்பட்ட பேருந்துகளும் சேதமடைந்தன. தாக்குதலில் காயம் அடைந்த போலீசார் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பிரச்சனை மேலும் ஏற்படாமல் இருக்க நெல்லை மாநகர பகுதிகள் மற்றும் மேலப்பாளையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
போராட்டக்காரர்கள் போலீஸ் தடையை மீறி ரயில் நிலையத்தில் நுழைந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்த முயன்றனர். இதனால் கலைந்து செல்ல எவ்வளவோ கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாரை தாக்க முயன்றனர். இதனைத்தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்தவே லேசாக தடியடி நடத்தப்பட்டது. மறியலில் ்டுபட்ட 18 பெண்கள் உள்பட 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளும் சேதமடைந்துள்ளன. இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. மேலும் பிரச்சனை ஏதுவும் ஏற்படாமல் இருக்க நெல்லை மாநகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான மேலப்பாளையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.


