5-வது நாளாக ஆந்திர சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத். செப். 23 - தனி தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் ஆந்திர சட்டசபையில் நேற்று தொடர்ந்து  5 வது நாலாக கடும் அமளி ஏற்பட்டது. ஆந்திர மாநில சட்டசபையின்  மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு  துஏங்கியது.  துவங்கிய நாள் முதற்கொண்டே பல்வேறு பிரச்சினகைளை முன் வைத்து  எதிர்க்கட்சி  எம்.எல்.ஏ.க்கள்  அமளியில் ஈடுபட்டனர்.

இதனால்  தினமும்  சபை  கூடுவதும் பிறகு  சபை  ஒத்திவைக்கப்படுவதுமாக இருந்தது.

நேற்று  காலை  சபை  கூடிய போதும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள்  கடும் அமளியில் ஈடுபட்டனர்.

தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்பதை  வலியுறுத்தி  தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.க்கள்  சபையில்  மையப்பகுதிக்கு  சென்று  கோஷங்களை எழுப்பினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்து  பா.ஜ.க. மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும்  கோஷங்களை எழுப்பினர்.

ஆளும்  காங்கிரஸ்  அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்   ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த  எம்.எல்.ஏ.க்கள் கறுப்பு கயிறுகளை அணிந்து சபைக்கு வந்தனர்.

இந்த கட்சியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. விஜயா கறுப்பு பார்டர் போட்ட சேலையை அணிந்து வந்திருந்தார்.

இதே போல ஒவ்வொரு எதிர்க்கட்சியும் ஒவ்வொரு  பிரச்சினையை முன்வைத்து  அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பின.

தாங்கள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்களை  அனுமதிக்க வேண்டும் என்று  கோரி  அவர்கள்  கோஷம் எழுப்பினர். ஆனால் எந்த ஒத்திவைப்பு  தீர்மானத்தையம்  சபாநாயகர் நாடெந்தலா மனோகர்  அனமதிக்கவில்லை.

இதனால்  சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. முதலில்  ஒரு மணி நேரமும் பிறகு  ஒரு மணி நேரமும் ஆக மொத்தம்  இரண்டு முறை இரண்டு மணி நேரம்  சபையை  சபாநாயகர்  ஒத்திவைத்தார்.

இதனால்  சபை நடவடிக்கைகள்  பாதிக்கப்பட்டன.

எதிர்க்கட்சிகளின் கடும் அணளி காரணமாக  ஆந்திர சட்டசபை நேற்று தொடர்ந்து 5 வது நாளாக  பாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: