முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிசூப்பர் - 8 சுற்று இந்தியாவுக்கு சவால்

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

கொழும்பு, செப். - 25 - இலங்கையில் நடைபெற்று வரும் உல கக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடுத்து நடக்க இருக்கும் சூப்பர் - 8 சுற் று இந்தியாவுக்கு கடும் சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூப்பர் - 8 சுற்றில் இந்திய அணி பலம் வாய்ந்த அணிகளான ஆஸ்திரே லியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் மோத வேண்டும். இலங்கையில் கடந்த 18 -ம் தேதி டி - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கியது. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் கோப்பையைக் கைப்பற்ற 12 அணிகள் களம் இறங்கின. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் இடம் பெற்றன. முன்னதாக லீக் போட்டி நடைபெற்ற து. இன்றுடன் லீக் ஆட்டம் முடிகிறது. இதுவரை 6 அணிகள் சூப்பர் - 8 சுற்றுக் கு தகுதி பெற்று உள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் சூப்பர் - 8 சுற்றுக்கு முன்னேறின. பி பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, சி பிரிவில் இருந்து இலங்கை, தென் ஆப்பிரிக்கா , டி பிரிவில் இருந்து நியூசிலாந்து ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. ஆப்கான் , ஜிம்பாப்வே அணிகள் வெ ளியேற்றப்பட்டன. சூப்பர் - 8 சுற்றில் நுழையும் மற்ற 2 அணிகள் எவை என்ப து இனிமேல் முடிவாகும். மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அய ர்லாந்து அணியும் ஒரு ஆட்டத்தில் மோத உள்ளன. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகள் மோத உள்ளன. இந்த லீக்கில் வெற்றி பெறும் அணி சூப்பர் - 8 சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. தவிர, ரன் ரேட் அடிப்படை யிலும் சில அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. சூப்பர் - 8 பிரிவில் மோது ம் 8 அணிக ளும் இ மற்றும் எப் ஆகிய இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இ பிரிவில் இங்கிலாந்து, இலங்கை மற்று ம் நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்று உள்ளன. மற்றொரு அணி இனி மேல் முடிவாகும். எப் பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் இடம் பெற்று உள்ளன. மற்றொரு அணி இனிமேல் முடிவாகும். 2007 -ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணிக்கு சூப்பர் - 8 சுற்று கடும் சவா லானதாக இருக்கும். இந்த சுற்றில் இந் தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. 2008 -ம் ஆண்டு சாம்பியனான பாகி ஸ்தானும் இதில் இடம் பெற அதிகம் வாய்ப்பு உள்ளது. கடந்த 2 உலகக் கோப்பையிலும் இந்தி ய அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோல்வி அடைந்து அரை இறுதி வாய்ப்பை இழந்தது. தற்போதும் இந்திய அணி பலம் வாய்ந்த அணிகள் உள்ள பிரிவில் இடம் பெற்று உள்ளது. இதனால் கடுமையாக போராட வேண்டும்.
-------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்