முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூப்பர்-8 சுற்று: இந்தியா-ஆஸ்., அணிகள் இன்று பலப்பரிட்சை

வெள்ளிக்கிழமை, 28 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, செப். 28 - டி- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் - 8 சுற்றில் இந்தி யா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்த உள்ளன. இலங்கையில் கடந்த 2 வார காலமாக 20-க்கு 20 உலகக் கோப்பை போட்டிக ள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பாக செ ன்று கொண்டு இருக்கிறது. 

இதில் கோப்பையைக் கைப்பற்ற 12 அணிகள் களம் இறங்கின. முன்னதாக நடந்த லீக்கில் 4 அணிகள் ரெளியேற்ற ப்பட்டன. தற்போது சூப்பர் - 8 சுற்று நடக்கிறது. 

இன்று 2 ஆட்டம் நடக்கிறது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. 2-வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. 

இன்றைய போட்டியில் இந்திய அணி தரப்பில் அதிரடி வீரர் சேவாக் களம் இறங்குகிறார். கடைசி லீக்கில் அவர் கா யம் காரணமாக பங்கேற்கவில்லை. 

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங் வரிசை பல மானது. ஆனால் பெளலிங் தான் ஒரே சீராக இல்லை. அதில் கவனம் செலுத்த வேண்டும். 

இந்திய அணியில் சேவாக், காம்பீர், விராட் கோக்லி, யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா மற்றும் கேப்டன் தோனி ஆகி யோர் பேட்டிங்கிற்கு வலு சேர்க்கின்ற  னர். 

பெளலிங்கைப் பொறுத்தவரை வேகப் பந்து வீச்சிற்கு ஜாஹிர்கான், இர்பான் பதான், பாலாஜி ஆகியோர் உள்ளனர். ஹர்பஜன் சிங் மற்றும் அஸ்வின் இரு வரும் சுழற் பந்து வீச தயாராக உள்ளனர். 

முன்னதாக நடந்த லீக் போட்டியில் ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசி னார். அவருக்குப் பக்கபலமாக சாவ் லா பந்து வீசினார். இது இந்திய அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. 

ஹர்பஜன் சிங் கடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் எடுத்ததால் அவருக்கு அணியில் நிச்சயம் இடம் உண்டு. அஸ்வினு க்கும் இடம் கிடைத்தால் சாவ்லா நீக்க ப்படலாம். 

ஆப்கானிற்கு எதிரான ஆட்டத்தில் ஜா ஹிர்கான் பந்து வீச்சு எடுபடவில்லை. எனவே அவருக்குப் பதிலாக இர்பான் பதான் மற்றும் பாலாஜி இடம் பெற வாய்ப்பு உள்ளது. 

ஆஸ்திரேலிய அணிக்கு பெய்லி தலை மை தாங்குகிறார். அந்த அணியில் மை க் ஹஸ்சே, வாட்சன், வார்னர், டேவி ட் ஹஸ்சே, ஒயிட், கிறிஸ்டியன் ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். 

தவிர, கும்மின்ஸ், ஸ்டார்க் மற்றும் ஹாக் போன்ற சிறந்த பெளலர்களும் இடம் பெற்று உள்ளனர். எனவே ஆஸி. அணி கடும் சவாலை அளிக்கும்.          

4 முறை 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி இதுவரை ஒரு முறை கூட 20 ஓவர் கோப்பையை வென்றது இல்லை. எனவே இந்த முறை கோப்பையை வெல்ல அந்த அணி ஆர்வமாக உள்ளது. 

இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி தூர்தர்ஷன் மற்று ம் ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இரவு 7.30 மணிக்கு  நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்