முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, அக். 17 - எனது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று துலீப் கோப்பையில் இரட்டை சதம் அடித்த அதிரடி வீரர் யுவராஜ் சிங் ஆவேசமாக தெரிவித்தார்.  துலீப் கோப்பை அரை இறுதியில் மத் திய மண்டல அணியும், வடக்கு மண்டல அணியும் மோதின. இதில் யுவரா ஜ் சிங் வடக்கு மண்டல அணிக்காக ஆடினார். 

இந்தப் போட்டியில் சிறப்பாக பேட்டி ங் செய்த சிங் 241 பந்தில் 33 பவுண்டரி, 3 சிக்சருடன் 208 ரன்கள்  விளாசி அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

மத்திய மண்டலத்திற்கு எதிரான இந்த ப் போட்டியில் இரட்டை சதம் அடித்த தன் மூலம் விமர்சகர்களுக்கு யுவராஜ் சிங் பதில் அளித்து இருக்கிறார். 

புற்று நோய் அறுவை சிகிட்சைக்கு பின்னர் ஓராண்டு காலம் கழித்து சமீபத் தில் 20-க்கு 20 உலகக் கோப்பையில் ஆடிய யுவராஜ் சிங் உடல் தகுதி குறித் து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. 

முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளிட்ட சில வீரர்கள் யுவராஜ் சிங் உள்ளூர் போட்டியில் ஆடாமல் நேரடியாக சர் வ தேச போட்டியில் ஆடியது குறித்து கேள்விகள் எழுப்பினர். 

இந்த நிலையில் முதல் தர போட்டியில் யுவராஜ் சிங் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் களத்தில் நின்று ரன் மழை பொ ழிந்து அனைவரையும் அசத்தினார். 

இது குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது எனது திறமையையும், உடற்தகுதியை யும் யாருக்கும் நிரூபித்துக் காட்ட வே ண்டிய அவசியம் இல்லை. 

முழு கவனமும் மிடில் ஆர்டரில் சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்த வே ண்டும் என்பதில் தான் உள்ளது. 

20 -க்கு 20 ஆட்டத்தில் சிந்தித்து செயல் படுவதற்கு அதிக நேரம் இருக்காது. எனவே அடித்து ஆடும் போது விக்கெ ட் விழத்தான் செய்யும். 

ஆனால் முதல் தர போட்டிகளில் அப் படி இல்லை. திட்டமிட்டு ஆடினால் ரன் மழை பொழியலாம். இவ்வாறு அவர் கூறினார். 

உள்ளூர் போட்டிகளில் யுவராஜ் சிங் இரட்டை சதம் விளாசியது இது 3- வது முறையாகும். இதற்கு முன்பு அவர் 2002 ல் 209 ரன்னும், 2010 ல் 204 ரன்னும் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்