பாகிஸ்தானில் சார்க் மாநாடு: இந்தியக்குழு பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 6 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்.நவ.- 6 - பாகிஸ்தானில் தொடங்கிய சார்க் மாநாட்டில் மீரா குமார் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு பங்கேற்றுள்ளது. சார்க் நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவர்களின்  6 ஆவது மாநாடு, இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.  இந்தியா சார்பில் மக்களவைத் தலைவர் மீரா குமார் தலைமையிலான நாடாளுமன்றக் குழு பங்கேற்றது. இம்மாநாட்டில் பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி பேசுகையில், ாபொதுநலன் சார்ந்த விவகாரங்களில் கருத்தொற்றுமையை உருவாக்குவதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதன் மூலம் சார்க் நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான அடிப்படையை உருவாக்க முடியும். பாகிஸ்தான் போல் எந்த நாடும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதில்லை. இதனால், நாங்கள்  40 ஆயிரம் பேரை இழந்துள்ளோம்ா என்று தெரிவித்தார்.

ஜர்தாரி-மீரா குமார் சந்திப்பு: இதனிடையே, பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியை மக்களவைத் தலைவர் மீராகுமார் சந்தித்துப் பேசினார். ாஇந்தியாவுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் உறுதி பூண்டுள்ளது. இந்தியா​- பாகிஸ்தான் இடையிலான நல்லுறவுக்கு இரு நாடுகளும் பாடுபட வேண்டும். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வைக் காண்பது இரு நாடுகளுக்கும் முக்கியமானதுா என்று ஜர்தாரி கூறினார். மீரா குமார் பேசுகையில், ாபாகிஸ்தானுடன் நல்லுறவையும், ஒத்துழைப்பையும் மேம்படுத்த இந்தியா விரும்புவதாகத் தெரிவித்தார்.  இரு தரப்பு உறவுகளில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு அவர்  திருப்தி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: