முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கோட்டை பேரூராட்சியில் ரூ.8 லட்சத்தில் புதியகுடிநீர் திட்டத்திற்கான பூமிபூஜை

செவ்வாய்க்கிழமை, 6 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

வத்தலக்குண்டு, நவ.- 6 - நிலக்கோட்டை பேரூராட்சியில் புதிய குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.8 லட்சத்தில் நீர் உந்தும் தரைதட்ட தொட்டி அமைப்பதற்கான பூமிபூஜை பேரூராட்சி தலைவர் வி.எஸ்.எஸ்.சேகர் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் புதிய குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகளுக்காக ரூ.8 லட்சத்தில் நீர் உந்தும் தரைமட்ட தொட்டி அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதற்கான நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சேகர் கலந்து கொண்டு துவக்கி வைத்து பின்னர் தெரிவிக்கையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய தலைமையில் கடந்த ஓராண்டில் 100 ஆண்டு பேசும் பல்வேறு சாதனைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை பேரூராட்சியிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பகுதி 2 திட்டம் மூலம் 150 எம்.எம்., 200 எம்.எம். பணிகள் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேரூராட்சிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கைகள் எடுத்து செயல்பாட்டிற்கு வந்துள்ளது. ஏற்கனவே உள்ள சப்ளை மூலம் தண்ணீர் வினியோகிக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தடையின்றி வினியோகம் செய்வதற்கு ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய நீர் உந்தும் தரைமட்டத் தொட்டி அமைக்கும் பணி தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்தவுடன் பகுதி 2 மூலம் பெறப்படும் நீரை நேரிடையாக புதிய தொட்டி மூலம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு விரைவாக கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்படும். எனவே நிலக்கோட்டை பேரூராட்சி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விரைவாகவும், தடையின்றி கிடைக்கும் என்றார். இந்நிகழ்ச்சியில் குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் ஜெயகிருஷ்ணன், நிலக்கோட்டை ஒன்றிய பேரவை செயலாளர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி முனியப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் தனசேகரன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்