ஸ்டாக் மார்க்கெட்டில் தீவிரவாதிகள் முதலீடு: மத்தியஅமைச்சர் ஷிண்டே தகவல்

புதன்கிழமை, 7 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

நியூயார்க், நவ.- 7 - ஸ்டாக் மார்க்கெட்டில் தீவிரவாதிகள், முக்கியமான பிரபலமான கம்பெனிகள் பெயரில் முதலீடு செய்து பணம் சம்பாதிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறினார். இண்டர்போல் அசெம்பிளி கூட்டத்தில் அவர் பேசியதாவது: தீவிரவாதிகளுக்கு முக்கியமாக பணம் கள்ள நோட்டாக வருகிறது. அது புழக்கத்தில் எப்படி வருகிறது அதை எப்படி தடுப்பது என்பதுதான் தற்போதைய முக்கியமான பணியாகும். இதில் இண்டர்போல் மிக முக்கிய பங்காற்ற வேண்டும். பேசுவார்த்தை, ஜனநாயக அரசியல் முறை, சட்ட விதிகள் மூலமாக தீவிரவாதத்தை இந்தியா தடுத்து நிறுத்துகிறது. பெருகிவரும் தீவிரவாத பயமுறுத்தல்களை தடுப்பதற்கு வேண்டிய நடைமுறைகளை கையாள நாம் தயாராக இருக்க வேண்டும். தீவிரவாத பயமுறுத்தல், தீவிரவாத தாக்குதலை சமாளிக்க வேண்டிய நடைமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும். மதம், அரசியல் உள்ளிட்ட வேறு எந்த நிலையிலும், எக்காரணத்தை முன்னிட்டும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இதில் சமாதானத்துக்து இடமில்லை. தீவிரவாதத்துக்கு எதிரான கொள்கையை பலப்படுத்த வேண்டும். இதில் சர்வதேச ஒத்துழைப்பு மிக அவசியம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: