முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி ஊழல்:டெல்லி ஐகோர்ட்டில் உள்ளஅனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டுதடை

சனிக்கிழமை, 10 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி, நவ. - 10 - நாட்டையே உலுக்கிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள அனைத்து மனுக்கள் மீதான விசாரணைகளுக்கும் சுப்ரீம் கோர்ட் நேற்று தடை விதித்தது. மத்திய புலனாய்வு துறையின் வேண்டுகோளை ஏற்று இந்த வழக்கு விசாரணைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இது பற்றி கூறுகையில், டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள அனைத்து மனுக்கள் மீதான விசாரணைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர். முன்னதாக, சி.பி.ஐ. எனப்படும் மத்திய புலனாய்வு துறை 2011 ம் ஆண்டு ஏப்ரல் 11 ம் தேதி சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை சுட்டிக் காட்டியது. அதாவது, இந்த ஊழல் வழக்கு தொடர்பாக எந்தவொரு மனுவையும் சுப்ரீம் கோர்ட்டை தவிர வேறு எந்த கோர்ட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் பிறப்பித்திருந்த உத்தரவை சி.பி.ஐ. சுட்டிக் காட்டியது. ஆனால் கோர்ட் உத்தரவை மீறி டெல்லி ஐகோர்ட்டில் அதுவும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு கிட்டத்தட்ட 20 மனுக்கள் நிலுவையில் உள்ளன என்கிற தகவலை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. எடுத்துக் கூறியது. இதை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் 6 வார காலத்திற்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டை தவிர வேறு எந்த கோர்ட்டும் விசாரிக்க கூடாது என்று கோர்ட் உத்தரவிட்ட பிறகும் கூட 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் தொடர்பாக டெல்லி ஐகோர்ட் விசாரணையை நடத்தியது குறித்து கடந்த நவம்பர் 8 ம் தேதியே சுப்ரீம் கோர்ட் தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்திருந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் ஐகோர்ட் இப்படி நடந்து கொண்டது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது என்றும் நீதிபதிகள் வியப்பு தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்