முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக பா.ஜ.க. அரசுகவிழாது முதல்வர் ஷெட்டர்உறுதி

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

சிக்மகளூர், நவ. - 12 - கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சி கவிழாது என்று அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார். சிக்மகளூர் மாவட்டம் சிருங்கேரிக்கு வந்த அவரிடம் பா.ஜ.க ஆட்சி கவிழும் ஆபத்து இருப்பதாக உலா வரும் தகவல் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பா.ஜ.க ஆட்சிக்கு ஆபத்து. விரைவில் கவிழும் என்று கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை. கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சி தனது 5 ஆண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும். அதனால் யாரும் குழப்பமடைய வேண்டாம். எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியில் சேருவீர்களா என்று கேட்கிறீர்கள். நான் தற்போது பா.ஜ.க அரசில் அங்கம் வகித்துள்ளேன். அரசின் முதல்வராக இருக்கிறேன். பா.ஜ.க.விலேயே தொடர்ந்து நீடிப்பேன்.
மக்களோடு இணைந்து வாழ நக்சலைட்டுகளுக்கு அரசு தொடர்ந்து அழைப்பு விடுத்திருந்த போதும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு நக்சலைட்டுகள் சரணடைந்தால் அவர்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளை மேம்படுத்துவதன் மூலம் நக்சல் இயக்கங்களுக்கு முடிவு கட்ட முடியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்