பாக்., பிரதமருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு வாபஸ்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,நவ.15 - பாகிஸ்தான் பிரதமர் ராஜா பெர்வெஸூக்கு எதிரான அவமதிப்பு வழக்கு நோட்டீஸை அந்த நாட்டு சுப்ரீம்கோர்ட்டு வாபஸ் பெற்றது. தற்போது அதிபராக இருக்கும் ஜர்தாரி மீது ஊழல் குற்றச்சாட்டு சம்பந்தமான வழக்கு சுவிட்ஸர்லாந்து நாட்டில் நடந்து வந்தது. ஜர்தாரி மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை அதிபராக இருந்த பெர்வெஸ் முஷாரப் மன்னித்துவிட்டார். இதனையொட்டி இருந்த வழக்கு முடிவுக்கு வந்தது. ஆனால் வழக்கை திருப்பி விசாரணை நடத்தக்கோரி பாகிஸ்தான் பிரதமராக இருந்த கிலானிக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு கிலானி மறுத்துவிட்டார். இதனால் அவரை கோர்ட்டுக்கு வரவழைத்து தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை வழங்கப்பட்டதையொட்டி அவரை பிரதமர் பதவியில் இருந்து அந்த நாட்டு சுப்ரீம்கோர்ட்டு டிஸ்மிஸ் செய்தது. தற்போது பிரதமராக இருக்கும் ராஜா பெர்வஸூக்கு சுப்ரீம்கோர்ட்டு மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதாவது ஜர்தாரி மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சுப்ரீம்கோட்டு கேட்டுக்கொண்டது. பிரதமர் ராஜா பெர்வெஸ் காலம் தாழ்த்தி வந்தார். இதனையொட்டி ராஜா பெர்வெஸூக்கும் சுப்ரீம்கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான நோட்டீஸை அனுப்பியது. 

இந்தநிலையில் ஜர்தாரி மீதான வழக்கை மீண்டும் தொடங்க ஸ்விட்சர்லாந்து நாட்டு அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக சுப்ரீம்கோர்ட்டில் ராஜா பெர்வஸ் சார்பாக சுப்ரீம்கோர்ட்டிற்கு தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம்கோர்ட்டு ராஜா பெர்வெஸுக்கு அனுப்பிய அவமதிப்பு நோட்டீஸை வாபஸ் பெற்றுக்கொண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: