இங்கிலாந்தில் பயங்கர மழை 800 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

லண்டன், நவ. - 27 - இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிக ளில் பெய்த பலத்த மழையில் 800 -க்கு ம் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மழை தொடரும் என்று வா னிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இங்கிலாந்தில் பல பகுதிகளில் கடந்த புதன் கிழமையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டு உள்ளது.800 -க்கும்  அதிகமான வீடுகள் நீரில் மூழ்கின. மழை வெள்ள த்தில் மரம் விழுந்தும் காரில் சிக்கியும், 2 பேர் பலியாகினர். மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வரு கிறது என்று அதிகாரிகள் கூறினர். மழை நீடிக்கும் என்று வானிலை மை யம் எச்சரித்துள்ளதால், மக்கள் அச்சத்தி ல் உள்ளனர். 

இது குறித்து இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனிடம் கேட்ட போது,  மழை பாதிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையா  ன அனைத்து உதவிகளும் உடனடியாக செய்யப்படும் என்று டிவிட்டரில் தெரி வித்து உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: