முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2012 -ம் ஆண்டில் 86 கோல் அடித்து மெஸ்சி புதிய சாதனை

புதன்கிழமை, 12 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

மேட்ரிட், டிச. - 12 - அர்ஜென்டினா கால்பந்து வீரரான லியோனெல் மெஸ்சி 2012-ம் ஆண்டில் 86 கோல் அடித்து புதிய சாதனை படை த்து இருக்கிறார். இதன் மூலம் ஜெர்ம னி வீரர் முல்லரின் சாதனையை அவர் முறியடித்து இருக்கிறார். இதற்கு முன்னதாக ஜெர்மனி வீரர் ஜெ ர்டு முல்லர் ஒரு காலண்டர் வருடத்தில் 85 கோல் அடித்ததே சாதனையாக இருந்து வந்தது. அதனை மெஸ்சி முறியடி த்து இருக்கிறார். ரியல் பெடிஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் மெஸ்சி 2 கோல் அடித்தத ன் மூலம் அவரது அணி 2-1 என்ற கோ ல் கணக்கில் முக்கிய வெற்றி பெற்றது. சமீபத்தில் காயம் அடைந்திருந்த மெஸ் சி பெடிஸ் அணிக்கு எதிரான ஆட்டத் திற்காக உடற்தகுதி பெற்று இருந்தார். இந்த 2 கோல் மூலம் 2012 -ம் ஆண்டில் அவரது கோல் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்தது. சமீபத்தில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நடந்தது. இதில் பெனிபிகா அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, மெஸ்சி முழங்காலில் காயம் அடைந் தார்.
கடந்த 1972 -ம் ஆண்டு ஜெர்மன் வீரர் நிகழ்த்திய சாதனையை முறியடித்த மெஸ்சி இந்த சீசனில் மட்டும் 23 கோல் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பார்சிலோனா அணியின் சூப்பர் ஸ்டாரான மெஸ்சி தனது புதிய கோல் சாதனையை விட தனது அணி 6 புள்ளி கள் பெற்று இந்தப் பிரிவில் முதலிடம் பெற்றதற்காக அதிக மகிழ்ச்சி அடைந் திருக்கிறார்.
இது குறித்து அவரிடம் கேட்ட ேபாது, சாதனையை முறியடிப்பது நல்லது தான். ஆனால் அதனை விட அணியின் வெற்றியே முக்கியமானது என்றார் அவர் . பர்க்காவின் ஸ்போர்ட்டிங் டைரக்ட ரான அந்தோணியிடம் இது குறித்து கேட்ட போது, அவரது சாதனைக்கு எதிர்காலத்தில் நல்ல மதிப்பு இருக்கும். தற்போது இது எளிதாக தெரியலாம். அவரது திறமையை மதிப்பிடுவது கடி னமானது. அவர் கால்பந்து விளையா டுவது ஒரு வரப் பிரசாதம் தான் என் றார் அவர்.
-------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்