முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.போட்டி - சென்னை அணிக்கு 2-வது வெற்றி

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஏப். 16 - சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை தோற்கடித்து 2வது வெற்றியை கைப்பற்றியது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 லீக் ஆட்டம், இறுதிப்போட்டிக்கான தகுதி ஆட்டம், இறுதிப்போட்டி ஆகிய 9 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. கடந்த 8​ந்தேதி ஐ.பி.எல். போட்டி தொடங்கியது. முதல் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்னில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தோற்கடித்தது. 2​வது அட்டம் நேற்று நடந்தது.  இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ​ வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதின. 

முன்னதாக சென்னை அணி 2 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 7​வது இடத்தில் இருந்தது. சென்னையில் நடந்த துவக்க ஆட்டத்தில் கொல்கத்தாவை வென்றது. மொகாலியில் நடந்த சென்னை அணிக்கான 2வது ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோற்றது.

அதே போல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 8​வது இடத்தில்  இருந்தது.

இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. தொடக்க வீரர்களாக விஜய்யும், ஹஸ்சியும் களம் இறங்கி விளையாடினர். 7​வது ஓவரில் விஜய் 31 ரன் எடுத்திருந்தபோது பிடி கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னா அதிரடியாக விளையாடி 16 பந்தில் 29 ரன் எடுத்து பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த கேப்டன் தோனி ஹஸ்சியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பந்து வீச்சை நாளாபுறமும் விளாசி ரன் குவித்தனர். ஹஸ்சி அரை சதம் அடித்தார் ஜாகீர்கான் வீசிய 17​வது ஓவரில் தோனி டிவில்லியர்சிடம் பிடிகொடுத்து வெளியேறினார். அதன் பின் வந்த மோர்கல் 9 ரன்னில் பெவுலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து வந்த பத்திரிநாத் 5 ரன்னில் அவுட் ஆனார். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக ஹஸ்சி 83 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெங்களூர் அணிக்கு வாண்டர் வாத், நினான் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஜாகீர் கான் ஒரு விக்கெட் பெற்றார்.

அடுத்து 184 ரன்கள் இலக்கோடு பெங்களூர் அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. இதன் துவக்க ஆட்டக்காரர்களாக அகர்வாலும், தில்ஷானும் இறங்கினர். முதல் ஓவரை மோர்கல் வீச அதன் 2வது பந்தில் தில்ஷான் டக்  அவுட்டானார். அகர்வாலுடன் பதான் சேர்ந்தார். பதான் 14 ரன்களும்,  அகர்வால் 7 ரன்களும் பெற்று ஆட்டமிழக்க, 4வது விக்கெட்டுக்கு கோலி-டிவில்லியர்ஸ் ஜோடி நிதானித்து ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. கோலி 35 ரன்கள் பெற்றுத்தந்து ஆட்டமிழக்க டிவில்லியர்ஸ் அரை சதத்தை கடந்து 64 ரன்களுக்கு உயர்ந்த போது மோர்கல் பந்துவீச்சில் அனிருதாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 

கோலி ஆட்டமிழந்ததும், பெங்களூர் அணிக்கு வெற்றிவாய்ப்பு மங்கிவிட, அடுத்து டி வில்லியர்சுடன் சேர்ந்த திவாரி, பூஜாரா ஆகியோர் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். 7வது விக்கெட்டாக டி வில்லியர்ஸ் அவுட்டானதும் அந்த அணியின் தோல்வி உறுதியானது. 

முடிவில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது.

சென்னை அணியிலிருந்து பந்துவீசியவர்களில் மோர்கல், ரந்தீவ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்ற, செளதீ, அஸ்வின், ஜகாதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் பெற்றனர். முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வென்றது.  இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஹசி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்