முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்க இடதுசாரி அரசு மீது முதல்வர் மோடி தாக்கு

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

பீர்பரா,ஏப்.17  - மேற்குவங்க மாநிலத்தில் எந்தவித வளர்ச்சி பணிகளையும் இடதுசாரி கூட்டணி அரசு செயல்படுத்தவில்லை என்று குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து குஜராத் மாநில பாரதிய ஜனதா முதல்வர் நரேந்திர மோடி நேற்று தீவிர பிரசாரம் செய்தார். பீர்பரா என்ற இடத்தில் நடந்த பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசும்போது, மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகளாக இடதுசாரி கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. ஆனால் இந்த இடதுசாரி அரசானது எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. தொழிற்சாலைகளையும் அமைக்கவில்லை என்றார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். மேற்குவங்காளத்தில் தொழிற்சாலைகள் இல்லாததால் வேலையில்லாமல் மக்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். மேற்குவங்க வடக்கு பகுதியில் உள்ள ஜல்பைகுரி, மற்றும் டார்ஜிலிங் மாவட்டங்களில் தேயிலை தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. ஆனால் அந்த பகுதியில் ஒரு தேயிலை தொழிற்சாலை கூட அமைக்கப்படவில்லை என்று மோடி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்