முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறுப்புப்பணம் - புதுவை கவர்னரிடம் விசாரிக்க முடிவு

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.17 - கறுப்புப்பணம் முதலை ஹாசன் அலிக்கு பாஸ்போர்ட் ஏற்பாடு செய்தது தொடர்பாக புதுவை லெப்டினெட் கவர்னர் இக்பால் சிங் மற்றும் உத்திரப்பிரதேச மாநில முதன்மை செயலாளர் விஜய் சங்கர் பாண்டே ஆகியோர்களிடம் விசாரிக்க மத்திய சட்ட அமுலாக்கப்பிரிவு இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஹாசன் அலி குதிரை பண்ணை நடத்தி வருகிறார். இவர் 30 ஆயிரம் கோடிக்கும்மேல் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார். மேலும் பல நாடுகளில் முதலீடும் செய்துள்ளார். இதுகுறித்து விசாரித்து கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் ஹாசன் அலி, போலி பாஸ்போர்ட் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக பீகார் மாநில அரசியல் தலைவர் அமலேந்து பாண்டேவுடன் மத்திய சட்ட அமுலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்தியது. மேலும் புதுவை லெப்டினெட் கவர்னர் இக்பால் சிங், உத்திரப்பிரதேச மாநில முதன்மை செயலாளர் விஜய் சங்கர் பாண்டே ஆகியோர்களிடமும் விசாரணை நடத்த சட்ட அமுலாக்க இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. கவர்னர் இக்பாலுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுவிட்டது. பாண்டேவுக்கு அடுத்தவாரம் சம்மன் அனுப்பப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்