முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சீல் அகற்றப்பட்டதாக தகவல்

சனிக்கிழமை, 29 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.29 - சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்  டிசம்பர் 30 ந் தேதியன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நடக்கவுள்ளது. மைதானத்தில் ஏற்கனவே சீல்  வைக்கப்பட்ட ஐ.ஜே.கே.என்ற மூன்று கேலரிகளின்  சீல் அகற்றப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்தது. 

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் கடந்த 15ந் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க இந்தியா - பாகிஸ்தான், கிரிக்கெட் மேட்ச் டிசம்பர் 30 ந் தேதியன்று நடைபெற உள்ளது. மைதானத்தில் ஏற்கனவே மூன்று கேலரிக்கு மாநகராட்சி சீல் வைத்திருந்தது. அந்த சீலை அகற்றி உத்தரவிடக் கோரி மனுவில் கூறியிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் மற்றும் டி.சிவஞானம் அடங்கி முதன்மை பென்சு டிசம்பர் 17ந்தேதியன்று நடக்கயிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்  மேட்ச்சிற்கு  சீல் வைக்கப்பட்ட மூன்று கேலரிகளை அனுமதித்து கொள்ள உத்தரவு பிறப்பித்தனர். அதையடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் கடந்த டிசம்பர் 23 ம் தேதியன்று அனைத்து டிக்கெட்களை விற்று முடித்தனர். ஆனால், மாநகராட்சி சார்பில் சீல் அகற்றியதற்கான எந்த  அறிவிப்பும் தெரிக்கவில்லை என்று நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கே.வெங்கடராமன் மற்றும் வாசுகி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பென்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, சென்னை மாநகராட்சி தரப்பில் அரசு பிளிடர் வெங்கடேஷ் ஆஜராகி கடந்த 17ந் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றும் வகையில் சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐ.ஜே.கே.என்ற மூன்று கேலரிக்கும் வைக்கப்பட்ட சீலை அகற்றிவிட்டோம் என்று தெரிவித்ததை அடுத்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்