முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் அலுவலர்கள் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஏப்.18 - மதுரை மாவட்டத்தில் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், வேட்பாளர்களின் முகவர்கள் அறையின் அருகாமையில் தங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் சகாயம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த 13ம் தேதி நடந்து முடிந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கல் மதுரை மருத்துவக்கல்லூரி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் மற்றும் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி ஆகிய மூன்று மையங்களில் உரிய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மையங்களில் காவல் துறையினரால் நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வருவாய்த்துறையில் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் சுழற்சி முறையில் 24மணி நேரமும் கண்காணித்திட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் வாயிலில் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியினைச்சேர்ந்த வேட்பாளர்களின் முகவர்கள் இந்த அறையின் அருகாமையில் இருந்திடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் ஒரு முகவர் மட்டும் இருந்திட அனுமதிக்கப்படும். இதற்கான அனுமதியினை புகைப்படத்துடன் கூடிய உத்தரவினை அந்தந்த சட்டமன்ற தொகுதியினை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தினசரி 4முறையும், மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் தினசரி 2முறையும் இந்த மையங்களை பார்வையிட உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அவ்வப்போது திடீர் தணிக்கை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்