பணவீக்கம் 8.23 சதவீதம் - கோதுமை விலை குறைந்தது

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      வர்த்தகம்
IndianRupee

 

புதுடெல்லி, பிப். 15 - நாட்டின் பணவீக்க விகிதம் 8.23 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் கோதுமை சர்க்கரை விலைகள் ஓரளவு  குறைந்தன.

கடந்த  டிசம்பர் மாதம் நாட்டின் பணவீக்க விகிதம் 8.43 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஜனவரி மாத கணக்கின்படி 8.23 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சில உணவு பொருட்களின் விலைகள் குறைந்ததே என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சர்க்கரை, பருப்பு, கோதுமை, உருளைக்கிழங்கு போன்றவற்றின் விலைகள் குறைந்துள்ளதால் பணவீக்கம் குறைந்துள்ளது என்று அவர்கள் கூறினர்.

இருந்தாலும் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலைகள் தொடர்ந்து உயர்வு நிலையிலேயே இருக்கின்றன என்றும் அவர்கள் கூறினர். காய்கறிகளின் விலைகள் 65 சதவீதம் உயர்ந்துள்ளன. குறிப்பாக வெங்காயத்தின் விலை  இரு மடங்காக  உயர்ந்துள்ளது. பழங்களின் விலைகள் 15.01 சதவீதம் உயர்ந்துள்ளன. முட்டை விலை 15.09 சதவீதம் உயர்ந்துள்ளது.

சில முக்கிய உணவு பொருட்களின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளதால் நாட்டின் பணவீக்கம்  7 சதவீதமாக குறையும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: