முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து சவால்களையும் சந்திக்க தயார்: தளபதி விக்ரம்சிங்

செவ்வாய்க்கிழமை, 15 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 16 - உள்நாட்டு சவால்கள் மட்டுமல்ல, வெளிநாட்டு சவால்களையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராகவே உள்ளது என்று இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் விக்ரம்சிங் தெரிவித்தார். புது டெல்லியில் 65 வது ராணுவ தின கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு ராணுவ தலைமை தளபதி ஜெனரல் விக்ரம்சிங் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 

நமது நாடு உள்நாட்டு சவால்கள் மட்டுமல்ல, வெளிநாட்டு சவால்களையும் எதிர்நோக்கி உள்ளது. ஆனால் அத்தனைசவால்களையும் எதிர்கொள்ள நமது ராணுவம் தயாராகவே உள்ளது. இந்த நாட்டின் எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் இந்திய ராணுவம் வலிமை பெற்றுள்ளது என்பதை நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். உங்களுக்கு ஒரு உறுதி கூறுகிறேன். உள்நாட்டு சவால்கள் மட்டுமல்ல, வெளியில் இருந்து வரும் சவால்களையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. 

இவ்வாறு தலைமை தளபதி பேசினார். 

கடந்த சில நாட்களாகவே நமது எல்லைப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதையொட்டி கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன் எல்லை கட்டுப்பாடுக் கோடு அருகில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் துருப்புகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். அதில் ஒருவர் பாகிஸ்தான் படையினரால் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கொடூரமான மன்னிக்கவே முடியாத செயல் என்று தலைமை தளபதி தனது உரையில் குறிப்பிட்டார். இதற்கு தக்க பதிலடி கொடுக்கவும் நமக்கு உரிமை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக, இந்தியா கேட்டில் உள்ள தியாகிகள் நினைவிடமான அமர்ஜவான் ஜோதியில் தலைமை தளபதி விக்ரம்சிங் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். சில இந்திய வீரர்களுக்கு அப்போது வீரதீர செயல்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டு அவர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்