Idhayam Matrimony

அலகாபாத் கும்பமேளாவில் ஒரு கோடி பேர் நீராடினர்

செவ்வாய்க்கிழமை, 15 ஜனவரி 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

அலகாபாத், ஜன.16 - அலகாபாத்தில் 55 நாட்கள் நடைபெறும் கும்பமேளா தொடங்கியது. முதல் நாளில் ஒரு கோடி பேர் புனித நீராடினர். உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வகி ஆகிய 3 நதிகளும் ஒன்று சேருமிடம் திரிவேணி  சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.

இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு புனித நீராடும் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது கங்கை கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான சாமியார்களும், துறவிகளும், பூஜை முடிந்ததும், கங்கையில் இறங்கி புனித நீராடினர். மாலை வரையில் ஒரு கோடி பேர் புனித நீராடினர். பக்கத்து மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூட்ட நெரிசல் காரணமாக நீராடாமல் திரும்பிச் சென்றனர். 

கும்பமேளா 55 நாட்கள் நடைபெறும். கும்பமேளா தொடங்குவதற்கு முன்னரே பக்தர்கள் கங்கையில் புனித நீராடினர். இதில் 10 கோடி பேர் நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் வசதிக்காக 58 சதுர கி.மீ. அளவுக்கு ஆயிரக்கணக்கான தற்காலிக டெண்ட்கள் போடப்பட்டுள்ளன. அவர்களுக்கு ருடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

அவசக உதவிக்கு இலவச டெலிபோன் மையங்கள் அமைத்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.தற்காலிக மூங்கில் பாலங்கள் ஆற்றின் குறுக்கே பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago