முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப்,ஹரியானா, ராஜஸ்தானில் பலத்த மழை கொட்டியது

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      இந்தியா

சண்டிகார், ஏப்.- 19 - பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் நேற்று இரண்டாவது நாளாக பல இடங்களில் கனத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சண்டிகார், பஞ்குளா, அம்பாலா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் பலத்த மழை பெய்தது. அமிர்தசரஸ் நகரில் 16.8 மி.மீ அளவுக்கு மழை பதிவானது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. லூதியானா, ஜலந்தர், மோகா, பக்வாரா, குர்தாஸ்பூர், பதான்கோட் ஆகிய நகர்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட காற்றழுத்த மாற்றங்களின்  காரணமாகவே இந்த கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மிக அதிக அளவாக கிசார் நகரில் 23.8 மி.மீ. மழை பெய்துள்ளது. இதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் நேற்று கனத்த மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. பலத்த காற்றுடன் இந்த ஆலங்கட்டி மழை பெய்ததால் வீடுகளின் மேல் இருந்த கூரைகள் பறந்தன.  மின்சார வயர் அறுந்து விழுந்து ஒருவர் பலியானார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago