முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினேகன் - மேக்னா நடிக்கும் உயர்திரு 420

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      சினிமா

 

ரிச் இந்தியா சார்பில்  சந்திரசேகரின் முதல் தயாரிப்பு உயர்திரு 420. பிரபல தொழிலதிபர் ரிச் இந்தியா சந்திரசேகர் இதில் நடித்தும் தயாரித்தும் இருக்கிறார். கவிஞர் சினேகன் இந்த படத்தில் அசத்தலான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவரது கதாபாத்திரம் தமிழ் சினிமா வரலாற்றில் இன்னொரு புதிய அத்தியாயம். இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை மேக்னா நடித்து இருக்கிறார். தமிழ் சினிமாவின் ஜூனியர் நயன்தாரா இவர். சினேகன் மேக்னாவின் காதல் மிகவும் புதுமையானது. மேலும் கண்களால் கைது செய் படத்தின் கதாநாயகன் வசீகரன் எட்டு வருட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடம் ஏற்று நடித்து இருக்கிறார். பாஸ்கியின் காமெடி இப்படத்தில் பெரிதாக பேசப்படும் இவர்களுடன் ஜெயபிரகாஷ், ராஜ்கபூர், சிட்டிபாபு, ரமேஷ்கண்ணா, அஷரா, தீபக், அஷயா என பல முன்னணி பிரபலங்கள் இணைந்து மிரட்டி இருக்கிறார்கள். இப்படத்தின் கதையை எழுதி இயக்கி இருப்பவர் பிரேம்நாத்.எஸ். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இவரது நுண்ணறிவும் உழைப்பும் தெரியவரும். 

மேலும் இப்படத்திற்கு டி.ஷங்கரின் ஒளிப்பதிவு உயிரோட்டத்தை கொடுத்து கண்களை குளிர வைத்தும், பல கோணங்களில் மிரட்டலாகவும் காட்டியுள்ளார். இசையமைப்பாளர் மணிசர்மாவின் இசையில் முப்பொழுவதும் முனுமுனுக்க வைக்கும் பாடல்களும், பின்னணி இசை சேர்ப்பும் அற்புதம். வசனம் ஜி.ராதாகிருஷ்ணன்  எழுதியுள்ளார். படத்தொகுப்பு கே.கே.கவனிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க கமிர்ஷியல் கலந்து படம் மலேசியாமல் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றது. 

கவிஞர் சினேகன் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பாண்டியனிடம் ஆறு மாதங்கள் கடினமான பயிற்சி எடுத்தார். படத்தின் சண்டை காட்சிகளில் எந்த ஒரு ஆபத்தான காட்சிக்கும் டூப் போடவில்லை. உயர்திரு 420 படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதுமையான கோணங்களில் மலேசியாவின் அழகு இப்படத்தில் புத்தம் புதிதாக காட்டப்பட்டுள்ளது. உயர்திரு 420 படத்தின் இயக்குனர் பிரேம்நாத்.எஸ் பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். ஹாலிவுட் படங்களில் கையாளும் பல தொழில்நுட்ப உத்திகளை இப்படத்தில் காணலாம். இவர் கனடாவின்  ரைட்டர்ஸ் கில்ட் என்னும் எழுத்துத் துறையில் பயிற்சி பெற்றவர். தயாரிப்பாளர் ரிச் இந்தியா சந்திரசேகர், இப்படத்தை தயாரித்ததோடு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். படத்தில் இவரது காஸ்ட்யூம் செலவு மட்டும் பதினைந்து லட்சத்தை தாண்டும். இவர் மட்டுமின்றி படத்தில் அனைவருமே முக்கியமான பிரபலங்களாக உள்ளனர். கவிஞர் வாலி, கவிஞர் சினேகனுக்கு எழுதிய அறிமுக பாடலுக்கு மலேசியாவை சேர்ந்த நடனகலைஞர்களுடன் சினேகன் நடனம் ஆடி அசத்தி உள்ளார். இதற்காகவே சால்சா நடன பயிற்சியை சினேகன் கற்று கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்