முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 8-ம் தேதி அதிபர் ராஜபக்சே திருப்பதி வருகை

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

திருப்பதி, பிப். 6 - ஈ்ழத்தில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த பின்னர் இதுவரை 2 முறை திருப்பதிக்கு வந்து போய் விட்ட அதிபர் ராஜபக்சே, தற்போது 3 வது முறையாக வருகிற 8 ம் தேதி வரவுள்ளார். அவருக்கு இந்தமுறை மிகத் தீவிரமான எதிர்ப்பைக் காட்டப் போவதாக தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளதால், திருப்பதி வரும் ராஜபக்சேவுக்காக பலத்த பாதுகாப்புக்கு ஆந்திர அரசும், மத்திய அரசும் ஏற்பாடு செய்துள்ளன. 

முதலில் கொழும்பில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் வருகிறார் ராஜபக்சே. பின்னர் புத்தகயா செல்லும் அவர் அங்கு வழிபாடு நடத்துகிறார். பின்னர் அதே விமானத்தில் ஏறி ரேணிகுண்டா வருகிறார். அங்கிருந்து காரில் திருமலைக்குப் புறப்படுகிறார். திருப்பதி போய் சாமி தரிசனம் செய்து விட்டு இலங்கை திரும்புகிறார். தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே இந்தியாவுக்கு மீண்டும் மீணடும் வருவதற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல்வேறு போராட்டங்களையும் அறிவித்துள்ளன. 

டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிடப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் திருப்பதி வரும் ராஜபக்சேவுக்கு அங்கு கடும் எதிர்ப்பைக் காட்ட தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதால் ராஜபக்சேவுக்கு ஆந்திர அரசும், மத்திய அரசும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன. இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளும் இதற்காக திருப்பதி வந்துள்ளனர். திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஸ்ரீனிவாசராவ், போலீஸ் சூப்பிரண்டு சுப்புராமரெட்டி ஆகியோருடன் இலங்கை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி கோவில் வரை பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ்ஈடுபடுபவர்களை தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்த ஆந்திர போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக வேலூர், திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் தமிழக போலீசார் குவிக்கப்படுகின்றனர். அதேபோல திருப்பதி கோவிலிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கோவிலிலும் பதட்டமான சூழலே காணப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்