முக்கிய செய்திகள்

பருவமழை இந்த ஆண்டும் சீராக இருக்கும்

Rain

 

புதுடெல்லி, ஏப்.21 - நாட்டில் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பருவமழை சீராகவும் போதுமான அளவுக்கும் பெய்யும் என்று மத்தியஅமைச்சர் பவன்குமார் பன்சல் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறுகையில், நாடுமுழுவதுமே பருவமழை சராசரி அளவுக்கு பெய்யும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு மழை அளவு குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றார். என்னும் நாட்டில் வடகிழக்கு பகுதியில் பருவமழை குறையும். என வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்தத்தில் நீண்ட கால சராசரி மழை அளவு 98 சதவீதம் அளவு பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் அஜீத் தியாகி தெவித்தார். நீண்ட கால சராசரி மழை அளவு என்பது கடந்த 50 ஆண்டு கால மழையின் சராசரி அளவாகும். இது  இப்போது 89 செ.மீ. என்ற அளவில் உள்ளது. இந்த 89 செ.மீ. என்ற அளவில் 96 முதல் 104 சதவீதம் வரையில் மழை அளவு பதிவானல் இயல்பானமழை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருமழை சீராக இருப்பது விவாசயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும்  என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: