வத்தலக்குண்டுவில் தமிழகஅரசின் திருமண உதவித்தொகை வழங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

வத்தலக்குண்டு, பிப்.- 11 - திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்கும்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் திருமண உதவித்தொகை மறறும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் மோகன் தலைமை வகித்து பயனாளிகளுக்கு தமிழக அரசின் திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கத்தினை வழங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் யுவராணி, ஆமையாளர் செல்வவிநாயகம், துணைத்தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 13 பேர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கமும், 18 பேர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்மும் வழங்கப்பட்டது. விழாவில் கவுன்சிலர்கள் தமிழ்க்கொடி, பெருமாயி, பாண்டி, பேரூராட்சி துணைத்தலைவர் சதீஷ்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மரியலூயிஸ், ராம்தாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் அம்முனி அம்மாள், ஊர்நல அலுவலர்கள் இந்திராகாந்தி, வசந்தமுகில், ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: