முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாடிப்பட்டியில் தொற்று நோய்கள் தடுப்பு கருத்தரங்கு

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

வாடிப்பட்டி பிப் - 11 - மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலக கூட்ட அறையில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை தொற்று நோய்கள் தடுப்பு இயக்கம் கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக தொற்றுநோய்கள் தடுப்பு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். முதுநிலை உதவியாளர் சங்கரன் முன்னிலை வகித்தார். சுகாதார பணி மேற்பார்வையாளர் கண்ணன் வரவேற்றார். இந்த கருத்தரங்கை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மருதுபாண்டியன் தொடக்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன், வட்டார விரிவாக்க கல்வியாளர் பாண்டி, சுகாதார ஆய்வாளர்கள் கண்ணன், சக்திவேல், இராமகிருஷ்ணன் ஆகியோர் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார கழிப்பிடம், சுற்றுப்புற சுகாதாரம், வாந்தி, வயிற்றுபோக்கு, காலரா, மஞ்சள்காமாலை, டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, டைப்பாயிடு போன்ற நோய்கள் தடுக்கும் முறைகள் பற்றியும், அவைகள் வராமல் இருக்க செய்யக்கூடிய நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக விளக்கி பேசினர். இதில் கவுன்சிலர், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் கண்ணன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago