கடலில் மூழ்கி இறந்த மீனவர் குடும்பத்திற்கு முதல்வர் உதவி

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.14 - கடலில் மூழ்கி இறந்த மீனவருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அவரது குடும்பத்தினருக்கு ரூ.1லட்சம் நிதி உதவி செய்ய உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், பொழிக்கரை கிராமத்தைச் சேர்ந்த நெப்போலியன் என்பவரின் மகன் ஜேம்ஸ் 30.1.13 அன்று விளங்கோடு வட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது, கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த விபத்தில் அகால மரணமடைந்த மீனவர் ஜேம்ஸ் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் காலமான ஜேம்ஸ் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: