முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி பொறுப்பில் இருந்து பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

ஹலானா,ஏப்.22 - கியூபா கம்யூனிஸ்டு கட்சி தலைமை பொறுப்பில் இருந்து கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்து விட்டார். கடந்த 2006 ம் ஆண்டு உடல் நலக் குறைவால் அதிபர் பதவியில் இருந்து விலகிய அவர், கியூபா கம்யூனிஸ்டு கட்சியின் புதிய மத்திய குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 84 வயதான காஸ்ட்ரோ கியூபா கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழுவின் முதல் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதிபர் பதவியை துறந்த போது கட்சி தலைவர் பதவியையும் தனது சகோதரர் ரெளலிடம் ஒப்படைப்பேன் என்று அறிவித்திருந்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக வகித்து வந்த பதவியை அவர் இப்போது ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டத்தில் ஏற்பாடுகள் துவங்கின. காஸ்ட்ரோ ராஜினாமாவுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படும் முதல் செயலாளராக ரெளல் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்