முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலர் தினத்தை கண்டித்து நாய் - கழுதைக்கு திருமணம்

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.15 - காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் நாய்கள், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காதலர்கள் தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு வாழ்த்து அட்டை, பரிசுப் பொருட்கள், சாக்லேட்கள் வழங்குவார்கள். இந்நிலையில் காதலர் தினத்தன்று காதல் ஜோடிகள் அத்துமீறி நடப்பதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. புளியந்தோப்பு குட்டி தம்பிரான் தெருவில் உள்ள காந்தி சிலை அருகே இந்து முன்னணி மாநகர பொதுச் செயலாளர் எஸ்.எஸ். முருகேசன் தலைமையில் இந்து முன்னணி தொண்டர்கள் கூடினர். அவர்கள் ஒரு ஆண், ஒரு பெண் நாய்க்கு அலங்காரம் செய்து மாலை போட்டு மணமக்கள் கோலத்தில் அந்த இடத்திற்கு கொண்டு வந்தனர். அலங்கரிப்பட்ட நாய்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. பெண் நாய்க்கு மஞ்சள் கயிறு தாலி கட்டப்பட்டது. அதன் பிறகு மணமக்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது அவர்கள் காதலர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த நூதன திருமணத்தில் 100 பேர் கலந்து கொண்டனர். இகு குறித்து இந்து முன்னணி மாநகர பொதுச் செயலாளர் முருகேசன் கூறுகையில், நாங்கள் ஒன்றும் காதலுக்கு எதிரி அல்ல. காதல் என்ற பெயரில் தவறாக நடந்துகொள்கிறார்கள். இதனால் காதலின் புனிதம் கெட்டுவிட்டது. கடற்கரை, nullங்கா ஆகிய இடங்களில் காதலர்கள் தெரு நாய்கள் போல நடந்துகொள்கிறார்கள். அவர்களின் செயல் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. காதலர்களின் இந்த செயல்களால் தான் பாலியல் வன்முறை பெருகிக் கொண்டிருக்கிறது. பெண்கள் காம கண்ணோடத்தில் பார்க்கப்படுகிறார்கள். காதலர் தினமான இன்று காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி தான் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தோம் என்றார். இதே போன்று கொருக்குப்பேட்டையில் காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் அதன் மாநகர தலைவர் டி. மனோகர் தலைமையில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்