எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செஞ்சி, பிப்.16 - செஞ்சியில் வன்னியர் கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. விழாவிற்கு வன்னிய கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் விவேகானந்தன், பொதுச்செயலாளர் ஜோசப்ராஜ், மாநில செயலாளர் நவமணி சீனுவசான், பொருளாளர் அருண் கென்னடி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் மாநில நிறுவன தலைவர் ராமமூர்த்தி பேசியதாவது:-
வன்னியர்களுக்கான அறக்கட்டளை சொத்து ரூ.10 லட்சம் கோடி உள்ளது. இதனை வழக்கு தொடர்ந்து பெற்றுள்ளோம். இதை வன்னியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு அறக்கட்டளைக்கு 100 பேர் வீதம் 100 அறக்கட்டளையில் 10 ஆயிரம் வன்னியர்களுக்கு வேலை கிடைக்கும். வன்னியர் அறக்கட்டளை சொத்துக்களை வைத்து மாவட்டத்திற்கு 10 மருத்துவ கல்லூரிகளை தொடங்கலாம். வன்னியர்களுக்கு என்று தனி இணைய தளம் தொடங்கி வைத்தவர் ஜெயலலிதா. அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். வன்னியர் அறக்கட்டளை மூலம் வன்னிய கிறிஸ்துவர்களும் பயன் பெற வேண்டும். இட ஒதுக்கீடு கோரி சாலை மறியல் செய்து உயிர் நீத்த வன்னியர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை ராமதாஸ்.
வன்னியர்களை பயன்படுத்தி கோடி கோடியாக கொள்ளையடித்தவர் ராமதாஸ். வன்னியர்கள் ராமதாசை வெறுத்து வருகின்றனர்.
வன்னியர்கள் தலை நிமிர்ந்து வாழ வன்னியர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்து வருகின்றது. இதற்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ராமமூர்த்தி பேசினார்.
கூட்டத்தில் முதன்மை செயலாளர் தொப்புலான், அமைப்பு செயலாளர் குப்புசாமி, தலைமை நிலைய செயலாளர் சண்முகம், மகளிர் அணி தலைவி சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார். இந்த கூட்டத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |