முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20, 21-ல் எல்.ஐ.சி. ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

மதுரை, பிப். 19 - அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் வரும் 20, 21 தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இது தொடர்பாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மதுரை கோட்ட பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

இந்தியாவில் 23 தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆயுள் இன்ஸ்சூரன்சை நடத்துகின்றன. இதனால் ஏற்படும் போட்டிகளுக்கு இடையிலும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் 80 சதவீத வணிகத்தை தன்வசம் வைத்துள்ளது. எல்.ஐ.சி.யில் மட்டும் 40 கோடிக்கும் அதிகமான பாலிசிதாரர்கள் உள்ளனர். ஆனால் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்யவுள்ளது. 

இந்த சட்ட திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தியும்,  எல்.ஐ.சி. யின் பங்குகளை விற்கும் முயற்சிகளை கைவிட வலியுறுத்தியும், நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அகில இந்திய இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. 

மதுரை கோட்டத்தில் உள்ள 27 கிளை அலுவலக ஊழியர்கள் அனைவரும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர். எல்.ஐ.சி. பாலிசிதாரர்களை பாதுகாக்கும் நோக்கில் அன்றைய தினம் அனைத்து கிளைகள் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். பாலிசிதாரர்களும், பொதுமக்களும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டுகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்