முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஐ.பி.எம். வெப்சைட்டுகள் 9 மணி நேரம் முடக்கம்

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 19 - பிரபலமான கல்வி நிறுவனமான ஐ.ஐ.பி.எம்.-ன் பிரதான வெப்சைட்டுகள் பலவற்றையும் 9 மணி நேரமாக ஹேக்கர்ஸ் முடக்கி வைத்திருந்திருக்கின்றனர். இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பிளானிங் அண்ட் மானேஜ்மென்ட் என்ற ஐஐபிஎம் கல்வி குழுமத்தை நடத்தி வருபவர் அரிந்தம் சவுத்ரி. இவர் கொடுத்த ஒரு புகாரின் பேரில் தமது ஐஐபிஎம் நிறுவனத்துக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட சுமார் 78 வெப்சைட்டுகளை முடக்க ராஜஸ்தான் மாநிலம் குவாலியர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று 78 வெப்சைட்டுகளை முடக்க மத்திய தொலைத் தொடர்புத் துறையும் உத்தரவிட்டிருந்தது. சனிக்கிழமையன்று திடீரென்று ஐ.ஐ.பி.எம். குழுமத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுகளை ஹேக்கர்ஸ் முடக்கி வைத்து விட்டனர். இந்த வெப்சைட்டுகளை சுமார் 9 மணி நேரம் ஆடிப்லைனுக்கு கொண்டு போய் வைத்திருந்த ஹேக்கர்ஸ் பின்னர் விடுவித்திருக்கின்றனர். அரிந்தம் சவுத்ரி விவகாரம்தான் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காகவும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்