சீனாவில் அணை உடைந்தது: கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

பீகிங், பிப்.19 - சீனாவில் கடும் மழையால் அணை உடைந்து, பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். சீனாவில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் நிரம்பி வழிகின்றன. ஷாங்சி மாகாணம், ஹாங்டாங் நகரில் கடந்த 1959-ம் ஆண்டு கட்டப்பட்ட அணை திடீரென உடைந்தது. இந்த அணை தண்ணீர் தான் இங்குள்ள பாசன நிலங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்த அணை திடீரென உடைந்ததால் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், ரயில் தண்டவாளங்கள், சாலைகள் அனைத்தும் வெள்ள நீரால் சூழப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதிகளில் சிக்கிய சுற்றுலா பயணிகள் உள்பட சுமார் 3000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா பயணிகள் வசகிக்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் தற்காலிக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பயணிகள் தங்கள் டிக்கெட்டை  ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பழமையான அணை என்பதால் உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: