முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை டெஸ்ட்: கோலி சதம் - தோனி இரட்டை சதம்​

ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப்.25 - சென்னையில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான  நேற்று இந்தியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 501 ரன் எடுத்து விளையாடி வருகிறது.  இந்தியா​ ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 380 ரன் குவித்தது. கேப்டன் மைக்கேல் கிளார்க் 130 ரன்னும்,  ஹென்ரிக்ஸ் 68 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 7 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்று முன்தினம் 2​வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்து இருந்தது. தெண்டுல்கர் 71 ரன்னிலும், வீராட் கோலி 50 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 3​வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. சச்சினும், டோனியும் தொடர்ந்து ஆடினார்கள். பேட்டின்சன் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் கோலி 1 ரன் எடுத்தார். சிடில் வீசிய 2​வது ஓவரின் கடைசி பந்தில் தெண்டுல்கர் பவுண்டரி அடித்து  தனது கணக்கை தொடங்கினார். மிகவும் சிறப்பாக ஆடி வந்த தெண்டுல்கர் 81 ரன்னில் ஆட்டமிழந்தார். லயன் பந்தில் போல்டு ஆனார். 159 பந்துகளில் 7 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.  சதம் அடிக்க முடியாமல் தெண்டுல்கர் ஆட்டம் இழந்தது அனைவருக்கும் மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 196 ஆக இருந்தது. கோலி 54 ரன்னில் இருந்தார்.

4​வது விக்கெட் ஜோடி 91 ரன் எடுத்தது. அடுத்து கேப்டன் டோனி களம் புகுந்தார். 64.2​வது ஓவரில் இந்திய அணி 200 ரன்னை தொட்டது. இந்த ஜோடியும் பொறுப்புடன் ஆடியது. குறிப்பாக வீராட் கோலி தொடர்ந்து சிறப்பாக ஆடினார். அவருக்கு உறுதுணை அளிக்கும் வகையில் கேப்டன் டோனியும் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார். 75​வது ஓவரில் இந்திய அணி 250 ரன்னை எடுத்தது.

மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 263 ரன் எடுத்து இருந்தது. வீராட் கோலி 83 ரன்னிலும், தோனி 37 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். உணவுஇடைவேளைக்கு பிறகு இருவரும் தொடர்ந்து ஆடினர். டோனி அரை சதத்தை ர்த்தி செய்தார். இது அவருக்கு 29​வது அரை சதமாகும். அதன்பின் கோலி அபார ஆடி சதம் அடித்தார். 98 ரன்னில் இருந்த அவர் பவுண்டரி அடித்து சதத்தை ர்த்தி செய்தார். 199 பந்தில் 14 பவுண்டரி, 1 சிக்சருடன் சதத்தை கடந்தார்.

வீராட் கோலி சதத்தால் இந்திய அணி 300 ரன்னை கடந்தது. கோலி சதத்துக்கு பின் தோனி அதிரடியாக ரன்களை குவிக்க ஆரம்பித்தார். ஹென்ரிக்ஸ் ஓவரில் 1 சிக்சர், 1 பவுண்டரி அடித்தார். கோலி 107 ரன் எடுத்திருந்தபோது லயன் பந்தில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 324 ரன் எடுத்து இருந்தது.

அடுத்து வந்த ஜடேஜா, தோனியுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். சிறிது நேரத்தில் ஜடேஜா 16 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அஸ்வின் 3 ரன்னில் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் தோனி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அஸ்வின் அவுட்டை தொடர்ந்து ஹர்பஜன் சிங்,தோனியுடன் இணைந்தார். தோனி ஆஸ்திரேலிய பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினார். பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் பறக்க விட்டார். 116 வது ஓவரில் ஹர்பஜன் சிங் 11 அடித்திருந்த போது போல்டானார்.

பின்னர் களம் இறங்கிய புவனேஸ்வர்குமார், தோனியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தோனி அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இந்திய அணி 141 ஓவர்கள் வரை 8 விக்கெட்டை இழந்து 515 ரன்கள் குவித்தது. ஆட்டம் முழுவதும் இந்திய அணியின் ஆதிக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒருநாளில் இந்திய அணி 342 ரன்கள் எடுத்தது . தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை விட 135 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்