மகராஷ்டிர முதல்வரின் சொத்து மதிப்பு ரூ. 6.81 கோடி

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      இந்தியா
prithviraj

மும்பை,ஏப்.- 23 - மகராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் தனது சொத்து மதிப்பு ரூ. 6.81 கோடி என்று அறிவித்துள்ளார். சட்ட மேலவை தேர்தலில் போட்டியிடும் அவர் இந்த தகவலை தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  மகராஷ்டிர மாநில சட்ட மேலவைக்கு மே 4 ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. சவான் வெளியிட்டுள்ள சொத்து விவரங்களில் அவரது மனைவியின் சொத்துக்களும் அடங்கும். தங்கம், வெள்ளி, பங்கு பத்திரங்கள் என்ற வகையில் அசையும் சொத்துக்களாக ரூ. 4.27 கோடி மதிப்பிலும், விவசாய நிலம், வீட்டு மனைகள் என்ற வகையில் அசையா சொத்துக்களாக ரூ. 2.21 கோடி மதிப்பிலும் தனது சொத்துக் கணக்கை சவான் வெளியிட்டுள்ளார். சவான் 2009 - 10 ம் நிதியாண்டில் ரூ. 7.22 லட்சம் அளவில் வருமான வரி தாக்கல் செய்துள்ளார். தனக்கு சொந்தமாக ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான கார் ஒன்றும் உள்ளதாக குறிப்பிட்டுள்ள சவான் தன் மீது எவ்வித குற்ற வழக்கும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: