ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத் தொடர் தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

ஜெனிவா, பிப்.26 - ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 22-வது கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் தலைமையில் தொடங்கும் இந்தக் கூட்டத் தொடர் மார்ச் 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் மார்ச் 16-ந் தேதியன்று இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக ஆராயப்பட இருக்கிறது. அப்போது இலங்கை மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக நவநீதம் பிள்ளை தயாரித்துள்ள அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதன் பின்னர் மார்ச் 20-ந் தேதியன்று இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்கிறது. இந்தத் தீர்மானத்தை பல நாடுகளும் ஆதரிக்கக் கூடும் எனக் கூறப்பட்டாலும் இந்தியாவின் நிலை என்ன என்பது தெளிவாக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: