முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மன் பேட்மிண்டன்: ஆனந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச். 1- ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந் திய வீரர் ஆனந்த் பவார் வெற்றி பெற் று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் மூத்த வீரரான அரவிந்த் பட் முதல் சுற்றில் பூன்சக்கிடம் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளி யேறினார். 

ஜெர்மனி நாட்டில் உள்ள முல்ஹெய்ம் அன்டர் ரூர் நகரில் ஜெர்மன் ஓபன் பே ட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக ள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

சர்வதேச அளவிலான முக்கிய போட்டி களில் ஒன்றான இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் 

கலத்தில் குதித்துள்ளனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முத ல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் இந்தியாவின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஆனந்த் பவாரும், விக்டர் ஆக்செல்சனும் மோதினர். 

மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் ஆனந்த் சிறப் பாக ஆடி, 21 - 11, 22 - 20 என்ற கேம் கணக்கில் விக்டரை வீழ்த்தி காலிறுதி க்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 

இதில் வெற்றி பெற்ற இந்திய வீரர் தர வரிசையில் 41 -ம் நிலை வீரராவார். தோல்வி அடைந்த பூன்சக் 6 -ம் நிலை வீரராவார். இந்த ஆட்டம் சுமார் 35 நிமிடத்தில் முடிந்தது. 

மும்பை வீரரான ஆனந்த் அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சீன தை பெய் வீரர் சுவான் யி சுக்குடன் மோத இருக்கிறார். 

மற்றொரு ஆட்டத்தில் மூத்த வீரரரான அரவிந்த் பட்டும், பூன்சக் பொன்சனா வும் மோதினர். இதில் 2 -ம் நிலை வீர ரான பூன்சக் சிறப்பாக ஆடினார். 

இறுதியில் அவர் 21 - 10, 21- 16 என்ற கே ம் கணக்கில், வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்ட ம் சுமார் அரை மணி நேரத்தில் முடிந்தது. 

ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் தருண் கொனாவும், அருண் விஷ்ணு ஜோடியும், ஷெக் கோக் மற் றும் கிம் வாக் லிம் இணையும் பலப்ப  ரிட்சை நடத்தின. 

இந்தப் போட்டியில் ஷெக் மற்றும் கிம் இணை சிறப்பாக ஆடி, 21- 16, 21- 17 என்ற கேம் கணகக்கில் வெற்றி பெற்றது. இந்திய ஜோடி போராடி தோல்வி அடைந்தது. மேற்படி போட்டிகள் ஆர். டபுள்யு. இ. ஸ்போர்ட்ஸ் ஹாலே அரங்கத்தில் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்