முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்ச் 16-ம் தேதி பாசறை எழுச்சி தின பொதுக் கூட்டங்கள்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.5 - முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகமெங்கும் மார்ச் 16-ம் தேதி பாசறை எழுச்சி தின பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அ.தி.மு.க. இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை செயலாளரும், அமைச்சருமான வைகைச்செல்வன் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

ஏழை எளியோரின்பால் அக்கறையும், சமய சார்பின்மையின் மீது நம்பிக்கையும் கொண்டு புதுமைகளையும், அற்புதங்களைகளையும் படைக்கின்ற துணிவும், உறுதியும், அபூர்வ சக்தியும் கொண்டு மகத்தான தலைவராக திகழ்கின்ற, மாட்சிமை தாங்கிய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனையாலும், மதிநுட்பத்தாலும், வினை திட்பத்தாலும் உருவாக்கப்பட்டது தான் கழக இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை. 

இந்திய நாட்டின் மீதான மற்றும், ஒரு நீண்ட கனவும், சமூக நீதிக் கொள்கையும், தெய்வீக சிந்தனையும், தமிழ் மக்களின் மீது ஆழ்ந்த பற்றுறுதியும், பன்மொழிப் புலமையும், தேசிய பார்வையும் கொண்டு கல்வியும், பொருளாதார வளர்ச்சியும், ஒருமைப்பாட்டு உறுதியும் அனைவருக்கும் வேண்டுமென வலுவாக நம்புகின்ற ஒப்பற்ற தலைவர் தான் நம் கழக நிரந்தப் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா. 

முதல்வருடைய சீரிய வழிகாட்டுதலின்படி, இளைஞர்- இளம்பெண்கள் பொதுவாழ்வில் களமிறக்கி, மக்கள் நலப் பணிகளை செய்வதற்கு தயார்படுத்துகின்ற பயிற்சி பட்டறையாக திகழ்கிறது `கழக இளைஞர் பாசறை- இளம் பெண்கள் பாசறை'. அத்தகைய கழக இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை தோற்றுவிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பாசறை எழுச்சி தினப் பொதுக்கூட்டங்கள் நடத்துமாறு கழகப் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு இணங்க வருகின்ற 16.3.2013 சனிக் கிழமை அன்று கழக இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை சார்பாக, கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாசறை எழுச்சி தினப் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. 

மாவட்ட இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட கழகச் செயலாளர்களுடனும், மாவட்ட கழக நிர்வாகிகளுடனும், அறிவிக்கப்படும் மாவட்டங்களில் உள்ள அனைத்து கழக இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுடனும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்பு பேச்சாளர்களுடன் தொடர்பு கொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அமைச்சர் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்