அரசு கேபிள் டி.வி. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.8 - அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு மாத சந்தா தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என்று தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன மேலாண்மை இயக்குநர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.  குறைந்த கட்டணத்தில் நிறைவான கேபிள் டிவி சேவையை பொது மக்களுக்கு வழங்கும் உயரிய நோக்கத்துடன்  தமிழக முதலமைச்சர்,  தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புத்துயிரூட்டி, தமிழகம் முழுவதும் கேபிள் டிவி சேவையினை மாதம் ரூ.70/​ என்ற கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் என அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், கேபிள் டிவி சேவையை அளித்து வருகிறது. சில கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொதுமக்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட சந்தா தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரப்பெற்றன.  எனவே, பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கேபிள் டிவி சேவைக்கான மாதச் சந்தாத்தொகை ரூ.70/-​ஐ 01.03.2013 முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நேரடியாக ஆன்லைன் முறையிலும், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவும் செலுத்த கூடுதல் வசதிகள் செய்யப்பட்டன. 

இந்நிலையில், கேபிள் டி.வி. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி மெட்ராஸ் உயர்nullநீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு, 05.03.2013 அன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  ஆகவே, பொதுமக்கள் கேபிள் டி.வி. மாதச் சந்தாத்தொகை ரூ.70/-​ஐ அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நேரடியாக ஆன்லைன் முறையில் சூசூசூ.ஹஙுஹஙூசீஷஹஸங்டீ.ஷச்ஙி என்ற இணையதளத்தின் வழியாக செலுத்தலாம்.  இது தவிர, தற்போதுள்ள நடைமுறைப்படி கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலமாகவும் செலுத்தலாம். இதன் மூலம் பொது மக்கள் மாதக் கட்டணமான ரூ.70/-​ஐ மட்டும் செலுத்தி கேபிள் டிவி சேவையினைப் பெற்று பயனடையலாம் எனவும், இவ்வாறு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் வசூலிக்கப்படும் கேபிள் டி.வி. மாதாச் சந்தாத்தொகை ரூ.70/-​ல் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்களின் பங்கான ரூ.50/​ அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு  அரசு  கேபிள்  டிவி  நிறுவனத்தின்  மேலாண்மை  இயக்குநர்   விவேகானந்தன்  தெரிவித்துள்ளார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விஞ்ஞானிகள் சாதனை

உடல் உறுப்புகள் தட்டுப்பாடு காரணமாக, பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தலாமா என்ற ஆய்வில் ஈடுபட்டுவந்த விஞ்ஞானிகள் தற்போது, பன்றியின் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, பன்றியின் உடல் உறுப்புகளில் உள்ள மரபணுக்களில் செயல்படாமல் அடங்கி கிடக்கும் ‘பெர்வ்’ எனப்படும் வைரஸ்களை அகற்றும் ஆய்வில் ஈடுபட்டனர். தற்போது அவற்றை அகற்றி வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம், எதிர்காலத்தில் பன்றிகளின் உடல் உறுப்புகளை உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் மனிதர்களுக்கு பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

குழந்தைக்கு எமன்

குழந்தைகள் வெளியில் விளையாடும் போது, அவர்களது உடல் மற்றும் மனம் வலிமையடைகிறது. அவர்களுக்கு ஒற்றுமையையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது. இதனால் அவர்கள் நீண்ட காலம் உடல் மற்றும் மன வலிமையுடன் இருக்க முடியும். இதற்கு மாறாக ஸ்மார்ட்போனை விளையாட கொடுத்தால் இதெல்லாம் அப்படியே தலைக்கீழாக மாறும். மேலும் உடல்ரீதியாக, மனரீதியாகவும் பாதிப்புகுள்ளாகின்றனர்.

தூக்கமின்மை

பெண்களுக்குத் தூக்கம் குறையும்போது, ஆரம்பத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி ஏற்படும். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக அமைந்துவிடும். கண்டுகொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டுகளிலேயே ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும் ஆபத்து அதிகம்.

மிகவும் சிறியது

கோஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், நானிட் மைக்ரோ என்ற உலகின் மிகச்சிறிய அதாவது 1.8 அங்குல அளவே உயரம் உடைய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இதில், கால், மெசெஜ், வாய்ஸ் ரெக்கார்ட், கேமரா, புளூ டூத், ஹெட்போன்கள் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஸ்மார்ட் வாட்சாகவும் பயன்படுத்த முடியும்.

ஆஸ்துமாவுக்கு ...

கணேச முத்திரை உடலில் உள்ள 6 ஆதார சக்கரங்களில், நான்காவது சக்கரமான அனாகத்தை தூண்டவல்லது. மேலும் இதயத்தைப் பலப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, நம்பிக்கை தரும். மூச்சை சீராக்கி, ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்படி செய்து, ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும். தினமும் காலை, மாலை 15 நிமிடம் செய்தால் மிகுந்த பயன்.

சற்று புதுமையானது

விஞ்ஞானிகள் பாம்பினை அடிப்படையாகக் கொண்ட ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர். வளரக்கூடியதாகவும், வளைவு நெளிவுடன் உண்மையான பாம்பினை போன்று தோற்றமளிக்கும் இந்த ரோபோ மணிக்கு 35 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும், 100 கி எடையுடையது. இந்த பாம்பு ரோபோ, பேரழிவு அல்லது அவசர கால நேரத்தில் அதிகம் பயன்படுமாம்.

உடற்பயிற்சி

நாம் எந்த உடற்பயிற்சி செய்தாலும் உடலும், மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பது முக்கியம். உடற்பயிற்சி என்பது உடலை கஷ்டப்படுத்துவது அல்ல. உடலை வருத்திக்கொண்டு பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும்.  எனவே ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.

பெண்களின் மூளை

‘அல்சமீர்’ எனும் மறதி நோய் தொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுறுசுறுப்பு, ஒரு வி‌ஷயத்தை உற்று நோக்குதல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றில் ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் தெரியவந்தது. எல்லா செயல்களிலும் மிகவும் உறுதியாக உள்ளதும், மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அப்போது சில பாதிப்புக்குள்ளாகுவதும் தெரியவந்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறையால்....

ரத்தச் சுற்றோட்டத்தில் ரத்தம் உறைந்து விடுவதுதான் மாரடைப்புக்கு முக்கியக் காரணம். ரத்தத்தில் பைப்ரினோஜன் எனும் ரத்த உறைவுப் பொருள் உள்ளது. ரத்தம் திரவ நிலையில் இருந்தால் மட்டுமே பைப்ரினோஜன் தன் வேலையைச் சரியாகச் செய்யும். உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, அது திடமாகிவிட்டால், ரத்தக் குழாய்க்குள்ளேயே ரத்தம் உறைவதற்கு பைப்ரினோஜன் ஏற்பாடு செய்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. ஒருவர் தேவைக்குத் தண்ணீர் அருந்தாவிட்டால், முதலில் இதயத்தைச் சுற்றியுள்ள கொலாட்டிரல்ஸ் எனும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் மூடிக்கொள்ளும். அதாவது, இதயத் தசைகளுக்கு ரத்த வினியோகம் செய்யும் முதன்மை ரத்தக் குழாய்களான கரோனரி தமனிகளில் அடைப்பு உண்டாகி, மாரடைப்பு ஏற்படும்போது, இவை தான் இதயத்தசைகளுக்கு ரத்தம் கொடுக்கின்றன. இதன் மூலம் மாரடைப்பு தள்ளிப்போகவோ மாரடைப்பின் கடுமை குறையவோ வாய்ப்பு உள்ளது.

சிகரெட் கழிவில் ....

சிகரெட் புகைத்த பின் எறியப்படும், பஞ்சுடன் கூடிய கழிவு துண்டுகளை ரோடு போட பயன்படுத்த முடியுமாம். ரோடு போட‘பாராபின் வேக்ஸ்’ எனப்படும் மெழுகு மற்றும் ரசாயன பொருளுடன் சிகரெட் கழிவு துண்டுகளும் சேர்த்து ஒரு கலவை தயாரிக்கப்படுகிறது. இதை கொண்டு போடப்படும் ரோடு பலம் வாய்ந்ததாகவும்,  அந்த ரோட்டில் வெப்பம் அதிகம் வெளியேறுவதும் தடுக்கப்படுமாம்.

எச்சரிக்கும் ஆய்வு

மது குடிக்கும் பழக்கத்தால் பெண்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பெண்கள் மது போதையில் இருந்து தெளிய காலதாமதமாகும். இயற்கையாகவே பெண்கள் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைந்திருப்பதால், போதை தலைக்கேறினால் இறங்குவது சிரமம். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். தொடர்ந்து குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உண்டாகும் வாய்ப்பு மிக அரிது.

எளியது ஆபத்து

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் பாஸ்வேர்டை எளியதாக தேர்வு செய்து தவறு செய்துவிடுகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு கிட்டத்தட்ட 10 மில்லியன் எளிய பாஸ்வேர்டுகள் பொதுத்தளத்தில் கசிந்திருக்கிறதாம். இதனால் இணையம் தொடர்பான குற்றங்கள் பெருக வழிவகுக்கின்றன. எளிமையான பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் மிக எளிதாக திருட வழிவகை செய்யும்.