முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை கடற்கரையில் அவ்வையார் சிலைக்கு ஜெயலலிதா மாலை

வெள்ளிக்கிழமை, 8 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.- 9 - உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ் மூதாட்டி அவ்வையார் திருவுருவச் சிலைக்கு நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழச்சியில் அமைச்சர்கள், பொதுமக்கள், தொண்டர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். சென்னை கடற்கரையில் அவ்வையார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 11.40 மணிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அங்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்களும், தொண்டர்களும் வாழ்த்து கோஷம் எழுப்பி உற்சாகத்துடன் வரவேற்றார்கள். உற்சாக வரவேற்பை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா அவ்வையார் சிலை அருகே வந்தார். சிலை பீடத்தின் கீழ் அவ்வையார் படம் ரோஜா மலர் மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா, அவ்வையார் படத்துக்கு ரோஜாமலர்களை தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க வருங்கால பிரதமர் வாழ்க என்று வாழ்த்து முழக்கமிட்டார்கள். பெண்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். உலக மகளிர் தினம் என்பதால் ஏராளமான பெண்கள் பட்டு சேலை, புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் வந்திருந்தனர்.

பெண்கள் அங்கிருந்தவர்களுக்கு சாக்லெட் கொடுத்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் மதுசூதனன், அமைப்பு செயலாளர்கள் விசாலாட்சி நெடுஞ்செழியன், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளரும், வக்ப் வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் மற்றும் ப.மோகன், பா.வளர்மதி, பழனியப்பன், மூர்த்தி, கே.டி.பச்சைமால், பி.வி.ரமணா, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள், மேயர் சைதை.துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின், முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம், முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான கோகுல இந்திரா, மனோஜ்பாண்டியன் எம்.பி.சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.செந்தமிழன், கே.குப்பன், கே.பி.கந்தன், மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ., டி.ஜி.வெங்கடேஷ்பாபு, விருகை ரவி உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்