முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 வயது சிறுமி பலாத்காரம்: ஊனமுற்றவனுக்கு சிறை

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.15 - நடைபாதையில் உண்ண உணவு இல்லாமல் வாழ்ந்து வந்த 6 வயது சிறுமிக்கு உணவு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த 50 வயதான உடல் ஊனமுற்றவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டெல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுபற்றி கோர்ட்டு தெரிவித்துள்ள கருத்து வருமாறு: 

நடைபாதையில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இந்த குழந்தை வாழ்ந்து வந்துள்ளது. இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட  உடல் ஊனமுற்ற ஒரு கயவன்இந்த குழந்தைக்கு உணவு கொடுத்து பாலியல் பலாத்காரம்  செய்துள்ளான். இது பாவகரமானது. இதை மன்னிக்க முடியாது. எனவே இந்த குழந்தைக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும், அவளது மறுவாழ்வுக்கு வேண்டிய உதவி கிடைக்கவும், மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு இந்த வழக்கை அனுப்பி வைக்கிறோம் என்று கோர்ட்டு கூறியுள்ளது.

பழைய டெல்லியைச் சேர்ந்தவர் சுசில் என்ற லங்க்ரா. இவர் இந்த குழந்தைக்கு உணவு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது இயற்கைக்குப் புறம்பான குற்றமாகும். இதைவிடக் கொடுமை என்னவென்றால் இந்த கயவனுக்கு எனது தங்கையின் மீதும் ஒரு கண் இருந்தது என்று அந்த பிஞ்சு குழந்தை கோர்ட்டில் தெரிவித்துள்ளது. 

பால்மணம் மாறாத அந்த பச்சிளம் குழந்தையின் பிஞ்சு உடல் கூட இந்த காமக்கொடூரனின் கண்ணை மறைத்து விட்டது. இந்த காமுகனின் மனிதாபிமானமற்ற செயலுக்காக இவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்குவதாக கூடுதல் செசன்ஸ் நீதிபதி சவீதா ராவ் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த சிறுமிக்கு நேர்ந்த பரிதாப கொடுமையை போலீஸாரிடம் எடுத்துச் சென்று புகார் தெரிவிக்க வைத்த வழக்கறிஞர் சுவாதியை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது என்றும் நீதிபதி தெரிவித்தார்.  இந்த படுபாதகச் செயலை புரிந்த கயவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கருதிய சுவாதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சுவாதி இந்த விஷயத்தில் தலையிடாவிட்டால் அந்த மலரை அவன் பலமுறை கசக்கி எறிந்திருப்பான். அந்த பிஞ்சு குழந்தையின் கதறலுக்கு அந்த காமுகன் செவிசாய்க்கவில்லை. 

இந்த கொடியவனின் கைகளில் அந்த குழந்தை தொடர்ந்து சிரமப்பட்டிருக்கும். இதை சுவாதி தடுத்துள்ளார் என்று கோர்ட்  கருத்து தெரிவித்துள்ளது. ஹங்க்ரா பாலியல் பலாத்காரம் செய்ததை அந்த குழந்தையும், என்ஜிஒ சங்கமும் போலீஸில் தெரிவித்துள்ளனர்.  2011ிம் ஆண்டு இந்த வழக்கு பதிவாகியுள்ளது.  இந்த படுபாதகச் செயலிலல் இவன் ஈடுபடுவான் என்பதால்தான் இவன் ஊனமுற்றவனாகப் பிறந்தானோ என்று கருதவேண்டியதுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்