முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-டி பிரச்சாரம்: கின்னசில் இடம் பிடித்தார் மோடி

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

காந்திநகர், மார்ச். 16 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, 3 டி தொழில் நுட்பத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. வீடு வீடாக மக்களை சென்று சந்தித்து வாக்கு சேகரித்தது ஒரு காலம். இணைய தளம் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்வது அதிகரித்து வருகிறது. இதை விட வித்யாசமாக 'தி பெப்பர்ஸ் கோஸ்ட் இலூஷன் என்ற தொழில்நுட்பத்தின் படி கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தார் குஜராத் முதல்வர் மோடி. இந்த தேர்தல் பிரசாரத்தின் மூலம் ஒரே நேரத்தில் 53 இடங்களில் மோடியின் 55 நிமிட தேர்தல் பிரசாரம் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த பிரச்சாரம்தான் தற்போது சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இது தொடர்பாக தனது டுவிட்டர் வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ள மோடி, கடந்த 2012 ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரம் மறக்க முடியாதது என்றும், 3 டி தொழில்நுட்பத்தில் நடத்தப்பட்ட இந்த பிரசாரம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்