முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி

திங்கட்கிழமை, 6 மே 2024      சினிமா
Shanthakumar 2024-05-06

Source: provided

மௌன குரு  மகாமுனி'  படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்‌ஷன்-க்ரைம் த்ரில்லர் படம். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். சாந்தகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கதை - கொடைக்கானலில் 30 வயதில் ஒரு சித்த மருத்துவர் அமைதியான வாழ்க்கை நடத்தி வருகிறார்.

ஆனால், அவரது கடந்த கால விஷயம் ஒன்று அவரது ஆன்மாவை துளைத்துக் கொண்டிருக்கிறது. அந்த பிரச்சனை என்ன?  அதற்கு தீர்வு எப்படி கிடைத்தது என்பதே இப்படத்தின் ஒன் லைன். கொடைக்கானல், மதுரை, கடலுார், பழனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.

இப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, தமிழ்நாடு முழுவதும் வெளியிடவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து