முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் பெண்களுக் கெதிரான குற்றங்களை தடுக்க சட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

நாராயண்பூர்,(மே,வ.) மார்ச்.17 - நாட்டில் பெண்களுக்கெதிராக நடக்கும் குற்றங்களை தடுத்து நிறுத்த விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் நாராயண்பூரில் என்ஜினீயரிங் தொழில்நுட்ப கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அடிக்கல் நாட்டி வைத்து சோனியா காந்தி பேசுகையில் நாட்டில் பெண்களுக்கெதிராக நடக்கும் குற்றங்களை தடுத்து நிறுத்த விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்றார். பெண்களின் நலன்களுக்காகவும் அவர்களின் உரிமைகளை காக்கவும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண்களுக்கு கடன் வழங்குவதற்காக தனியாக வங்கி தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் தொழில் தொடங்கவும் சம்பாத்தியம் செய்யவும் பெண்கள் வங்கி பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் ரூ.ஆயிரம் கோடியில் நிர்பையை நிதியையும் ஏற்படுத்தியுள்ளோம். இது பெண்களின் கண்ணியத்தையும் கெளரவத்தையும் காப்பாற்றும் என்றார். 

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் பலாத்காரம், ஆசிட் வீசுதல் மற்றும் பல்வேறு கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் சோனியா காந்தி பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுத்து நிறுத்த சட்டம் இயற்றப்படும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. உணவு பாதுகாப்பு மசோதா குறித்து குறிப்பிட்ட சோனியா காந்தி, உணவு பாதுகாப்பு மசோதைவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. நாட்டில் உள்ள ஏழை மக்கள் பட்டினியால் வாடக்கூடாது. அதனால் உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் என்றார். நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி முன்னேற்றம் மிகவும் அவசியமானதாகும். கல்விக்கும் தொழில் கல்விக்கும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. கிராமப்புறத்தில் பிறக்கும் ஏழைக்குழந்தைகளுக்கும் தரமான கல்வியை புகுட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சோனியா காந்தி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்