முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை விவகாரம்: தீர்மானம் கொண்டு வரத் தயார்

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 20 - இலங்கை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், (தி.மு.க தலைவர் கருணாநிதி கோரியபடி) இலங்கை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இலங்கை விவகாரத்தை எழுப்பினர். டி.கே.எஸ். இளங்கோவன் பேசும் போது, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை பற்றி கவலை இல்லை. இலங்கை அரசால் அளிக்கப்பட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட்டதா? என்பதற்கான பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கு இருக்கிறது. ஆனால் மத்திய அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வினர், டி.கே.எஸ். இளங்கோவனை நோக்கி, நீங்கள் ஆளும் கட்சியா? எதிர்க்கட்சியா? என்று முழக்கங்களை எழுப்பி கூச்சலிட்டனர். 

பின்னர் பேசிய அமைச்சர் கமல்நாத், இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்கள் கவலைக்குரியதாக இருக்கிறது. இதைப் பற்றி வெளிப்படையான விவாதத்துக்கு அரசு தயாராக இருக்கிறது. மேலும் இலங்கை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இதற்கான நேரத்தையும் நாளையும் சபாநாயகர் தீர்மானிக்க வேண்டும் என்றார். கமல்நாத் கூறியது போல் ஒரு விவாதம் நடத்தப்பட்டு அதிலே இலங்கைக்கு எதிரான ஒரு கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டால் தி.மு.க. சமாதானாமாகி விடும். கருணாநிதி சுட்டிக் காட்டியிருப்பது போல மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க. நீடிக்க வாய்ப்பிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்