இந்தியா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இங்கி., எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், மார்ச். 20 - கடந்த வாரம் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கணவர் கண் முன்னேயே கற்பழிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து,  இந்தியாவிற்குச் செல்லும் பெண் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறு இங்கிலாந்து அறிவுறுத்தியுள்ளது. 

இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகள் தனி நபராலோ அல்லது குழுவாகவோ உடல் மற்றும் மன ரீதியான துன்பங்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள, அந்த நாட்டு வெளியுறவு மற்றும் நலவாழ்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியாக இந்தியாவிற்கு சுற்றுலா சென்றுள்ள பெண் பயணிகளுக்கு எங்களது அறிவுரையாவது, பெண் சுற்றுலாப் பயணிகள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கும், தனியாக வேறு எங்கும் வெளியில் செல்லவேண்டாம். உள்ளூர்வாசிகளைப் போன்ற நடை, உடை, பாவனைகளை மேற்கொள்ளுங்கள். இது மற்றவர்களுக்கு உங்கள் மீது தேவை இல்லாத சலனத்தை ஏற்படுத்தாது. பெண் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்ா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: