முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை விவகாரம்: பார்லி.யில் அமளி: சபை ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மார்ச். 20 - பாராளுமன்றம் நேற்று கூடியதும் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பாராளுமன்றம் கூடியதும் சபாநாயகர் மீராகுமார் ஒரு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். பின்னர் கேள்வி நேரத்தை துவக்கினார். அப்போது அ.தி.மு.க. இ. கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து கோஷமிட்டனர். இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டதாக கூச்சலிட்டனர். இதே போல் பிஜூ ஜனதா தள உறுப்பினர்கள் நால்கோ நிறுவனத்தை விற்க கூடாது என கோஷமிட்டனர். இந்த அமளிகளால் சபையை நடத்த முடியவில்லை. இதனால் சபாநாயகர் கூட்டத்தை 12 மணி வரை ஒத்தி வைத்தார். இதே போல் மேல்சபையிலும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை எதிரொலித்தது. அ.தி.மு.க. உறுப்பினர்கள் இலங்கை பிரச்சினையை கிளப்பியதால் அமளி ஏற்பட்டது. இதனால் அவை தலைவர் ஹமீத் அன்சாரி அவையை 15 நிமிடம் தள்ளி வைத்தார். பின்னர் சபை கூடியதும் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஒன்றுகூடி இலங்கை தமிழர் பிரச்சினையை கிளப்பினார்கள். தங்களுக்கு நீதி வேண்டும் என்று கோஷமிட்டனர். இதை தொடர்ந்து சபை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்