முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி ஏன் மாறினார்: ப.சிதம்பரம் வியப்பு

புதன்கிழமை, 20 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.21 - இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நிலை என்ன என்பது தி.மு.க.வுக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும் ஒருநாள் இரவில் கருணாநிதி எப்படி மாறினார் என்பது தமக்கு வியப்பாக உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வியப்போடு குறிப்பிட்டார். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கடந்த 9 ஆண்டுகளாக அங்கம் வகித்து வருகிறது தி.மு.க. இந்த அரசில் அங்கம் வகித்து பலருக்கு பதவிகளை மிரட்ட பெற்றதும் தி.மு.க.தான். இதுவரை பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு 6 முறை மிரட்டல் விடுத்ததும் தி.மு.க.தான். முதலில் மிரட்டுவார்கள் பிறகு பின்வாங்கிவிடுவார்கள். இதுதான் தி.மு.க.வின் பழக்கமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் இப்போது அரசில் இருந்து விலகிவிட்டதாக கருணாநிதி அறிவித்துள்ளார். இதுவும் ஒரு நாடகம்தான் என்கிறார்கள் தமிழக தலைவர்கள். முன்னதாக இலங்கை பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் அரசுக்கும் தி.மு.க.வுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டவுடன் டெல்லியில் இருந்து மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி ஆகியோர் சென்னை புறப்பட்டு வந்து கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் டெல்லி திரும்பிய அவர்கள் கருணாநிதியின் கோரிக்கையை பிரதமரிடம் தெரிவிப்போம் என்று கூறினார்கள். ஆனால் மறுநாள் காலையிலேயே தி.மு.க. தலைவர் கருணாநிதி, விலகல் முடிவை அறிவித்துவிட்டார். இது நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு வியப்பை கொடுத்துள்ளது. இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது:-

ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பது தி.மு.க.வுக்கு நன்றாகவே தெரியும். அதுபற்றி நாங்களும் கருணாநிதியுடன் பேசினோம். மார்ச் 18-ம் தேதி இரவில் அவர் பேசியதற்கும் மறுநாள் 19-ம் தேதி அவர் அறிவித்த அறிவிப்புக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு நாள் இரவில் அவர் எப்படி தனது மனதை மாற்றிக்கொண்டார் என்பதுதான் பெரும் வியப்பாக உள்ளது. இடையில் என்ன நடந்தது என்ன என்பது புரியவில்லை. இவ்வாறு சிதம்பரம் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்