முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுமீது எல்.கே.அத்வானி கடும் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.- 25 - மத்தியில்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல் மிகுந்த அரசாக இருக்கிறது என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மன்மோகன்சிங் கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் முதற்கொண்டு பிரதமராக இருந்துவருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது. அதுதான் அவர் செய்த சாதனை என்றார். மன்மோகன் சிங் மைனாரிட்டி அரசாக மாறியபிறகு ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்து ஓட்டுவாங்கியது மன்மோகன்சிங்தான். பகிரங்கமாகவும், வெட்கமின்றியும் இந்த ஊழல் மன்மோகன்சிங் காலத்தில் நடந்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஜப்பான் நாட்டில் புகுஷிமா அணுமின்சார நிலையத்தில் ஏற்பட்ட பேராபத்திற்கு பிறகு இந்தியாவில் இதுபோன்ற அணுமின்சார நிலையங்களில் அணுக்கதிர் வீச்சு ஏற்படாதவாறு இருக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அத்வானி கேட்டுக்கொண்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்